சிந்தனை, செய்தி, சில்லறை...

தாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன? - காணொளி - 20210227

20210227

தாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன? என்பதைப் பற்றி சில நிமிடங்கள் பேச முடியுமா என்று கேட்டார் வலைத்தமிழ் பார்த்தசாரதி. கட்டிப்பாக பேசுகிறேன் என்று சொன்னேன். இன்று நேரம் கிடைத்தது. பெரிதாக முன்னேற்பாடுகள் ஏதுமின்றி மனதில் தோன்றியதைப் பேசினேன். வாய்ப்புக்கு நன்றி!

சிந்தனை, செய்தி, சில்லறை...

மறக்கமுடியாத மாலையில் மறந்த பை - 20201218

20201218

போன வருடம் இதே நாளில் (டிசம்பர் 18ஆம் தேதி), நான் எனது பாஸ்போர்ட், பணம், விமான சீட்டு அனைத்தும் இருந்த கருப்பு நிற தோள் பையைத் தொலைத்துவிட்டு நெடுஞ்சாலையில் நின்றுகொண்டிருந்தேன். மறுநாள் காலை நான் ஸ்ரீபெரும்புதூரிலிருந்து டெல்லிக்குப் பயணம் செய்யவேண்டும். அமைச்சர்கள் பங்கேற்கும் முக்கியமான சந்திப்பு. பிறகு தில்லியிருந்து தாய்வானுக்குப் போக வேண்டும். இப்போது, சென்னை விமான நிலையத்தின் உள்ளே கூடப் போகமுடியாது என்னும் நிலை...

அக்கினிக் குஞ்சுகள்: இரண்டு குறுங்கதைத் தொகுப்புகள் - 20201212

(பயணி தரன், இந்து தமிழ் திசை, 12 டிசம்பர் 2020)

எழுதித்தள்ளிய காவியக் காலங்களிலிருந்து எழுத்தை எண்ணும் கீச்சுக் காலத்துக்கு வந்துவிட்டோம். இந்தக் காலத்திலும், கதை சிறுத்தாலும் காரம் போகாது என்று நிறுவுகின்றன குறுங்கதைகள். இந்த இலக்கிய வடிவத்திலும் புது உயரங்களை எட்ட முடியும் என்பதைத் தமிழ் இலக்கிய உலகில் தடம் பதித்த இரு எழுத்தாளர்களின் சமீபத்திய படைப்புகள் நமக்குக் காட்டுகின்றன. பெருந்தேவியின் 51 குறுங்கதைகள் அடங்கிய ‘ஹைன்ஸ் ஹால் கட்டிடத்தில் வாழும் பேய்’ என்னும் நூலும், சுரேஷ்குமார இந்திரஜித்தின் 64 குறுங்கதைகள் அடங்கிய ‘பின்னணிப் பாடகர்’ என்னும் நூலும் கவனத்துக்குரியவை.

இந்த இரண்டு நூல்களுமே இன்றைய கரோனா வைரஸ் அவலத்தையும் தொட்டுப் பேசும் அளவுக்குச் சமீபத்தியவை. இரண்டும் தமிழின் கதைசொல்லலின் வேரையும் விடாமல் புதுப்புதுப் பூக்களை அறிமுகப்படுத்தியிருப்பவை. அதிலும் மேலாக, பல எதிர்காலச் சாத்தியங்களையும் சுட்டிக்காட்டியிருப்பவை.

அக்கினிக் குஞ்சுகள்: இரண்டு குறுங்கதைத் தொகுப்புகள் - 20201212

போன்சாய் குறுங்கதைகள்: ‘பின்னணிப் பாடகர்’ - 20201123

‘குறுங்கதை என்பது ஒரு வீரியமுள்ள விதை. ஒரு தோட்டாவைப் போல, ஒரு சவுக்கைப் போல, ஒரு மின்னலைப் போல, வேகமும் வெடித்தன்மையும் கொண்டு அந்தக் கதை செயல்பட வேண்டும்’ என்பது பொதுவான எதிர்ப்பார்ப்பு. ஆனால், ஒரு போன்சாய் மரத்தைப் போல பெருங்கதைகளுக்கான நிதானமும், கால நீட்டமும் முழுமையான உருவமும் கொண்ட குறுங்கதைகளையும் படைக்க முடியும் என்று செய்துகாட்டியிருக்கிறார் சுரேஷ்குமார இந்திரஜித். இவரது 64 குறுங்கதைகளின் தொகுப்பு ‘பின்னணிப் பாடகர்’ எனும் நூலாக வெளிவந்திருக்கிறது.

எனக்கு இன்று, சிறுவயதில் எனது மூக்கைத் துளைத்த தாம்பரம் இனிப்புக் கடைகளின் வாசம் நினைவுக்கு வந்துவிட்டது. காரணம், ஒரு இலக்கிய உரை.

தில்லிகை - தில்லி இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்திருந்த “கதை சொல்லியின் கதை” என்னும் பவா செல்லத்துரையின் சூம் உரையில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. தன் வாசிப்புகளை கதைசொல்லும் வசியமாக மாற்றியவரின் கதை எப்படி இருக்கும் என்னும் ஆர்வம் எனக்கும் மிகுந்திருந்தது.

டேஸ்ட் பொட்டலமாக ஒரு கதைசொல்லியின் கதை - 20200712

கரோனா வைரசுக்குப் பின்வரும் கால உலகம்: ஹராரி - 20200329

தமிழில்: மா அண்ணாதுரை

நண்பர் அண்ணாதுரை மனதுக்கு நெருக்கமானவர். இந்திய செய்திப் பணியில் அதிகாரியாக பணிபுரிகிறார். சமீபத்தில் வெளியான “கரோனா வைரசுக்குப் பின்வரும் கால உலகம்” எனும் யுவல் நோவா ஹராரி எழுதிய முக்கியமான கட்டுரையை அக்கறையுடன் அழகாக மொழிபெயர்த்திருக்கிறார். அயோக்கியர்கள் புனையும் கதைகளை அற்பர்கள் பரப்பிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இதுபோன்ற அறிவார்ந்த விஷயங்கள் தமிழுக்கு வந்துசேர்வது கொண்டாடப்பட வேண்டிய விஷயம்.

“கடவுள் இல்லை. பேரண்டத்தை வடிவத்துடன் யாரும் படைக்கவில்லை, காக்கவில்லை. வடிவமாக அமைந்ததெல்லாம் தங்கியது, மற்றது அழிந்தது. அணுத்துகள், மண் புழு, மனித இனம், தண்ணீர், சூரியப் பிழம்பு, அண்ட சராசரங்களின் அசைவுகள் என்று அத்தனையையும் அவற்றின் வடிவமும் செயலும் எப்படி உருவாகி எப்படி செயல்பட்டு வருகிறது என்பதை அறிவியலின் துணை கொண்டு நாம் விளக்கிவிட முடிகிறது. அன்பை, காதலை, அழகை பரிணாம வளர்ச்சிக் கோட்பாடுகள் மூலம் அறிவியல் அணுகிவிட்டது. மூளை கம்பியூட்டர் போலத்தான். நின்று போன கம்பியூட்டருக்கு சொர்கம் நரகம் மறுபிறப்பு எல்லாம் கிடையாது” என்றார் ஸ்டீபன் ஹாவ்கிங்.

அண்டத்தின் அணையா அறிவுச் சுடர்: ஸ்டீபன் ஹாவ்கிங் - 20200315

(2ஆம் ஆண்டு நினைவு நாள்)

முன்பின் தெரியா ஓவியரின் அன்பும் கனிவும் அக்கறையும் - 20200314

“அம்மா ஒரு எழுத்தோவியர். Calligraphist. உங்களுக்காகவே ஒரு சிறிய ஓவியத்தை வரைந்திருக்கிறார். அதை உங்களிடம் நேரடியாக கொடுக்குமாறு என்னை கேட்டுக் கொண்டார். அதைக் கொடுக்க உங்களை ஒரு சில நிமிடங்கள் சந்திக்க முடியுமா?” என்று ஒரு தாய்வான் நண்பர் எங்களை அணுகினார். “அதற்கென்ன, அவசியம் வாருங்கள்” என்று சொன்னேன்.

உங்களுக்கும் நிச்சயம் இந்த அனுபவம் இருக்கும். திடீரென்று ஏதாவது ஒரு பழைய பாடலின் வரி உங்கள் மனதில் உட்கார்ந்து கொள்ளும். அன்றைக்கெல்லாம் நாம் வேலை, காகிதம், சந்திப்பு என்று அலைந்துகொண்டிருந்தாலும், அந்த ஒற்றை வரி மட்டும் அடம்பிடிக்கும் குழந்தையாய் நம் கவனத்தை இறுக்கக் கட்டிக்கொண்டு விட்டுவிடாமல் கூடவே வரும்.

நான் காலையில் எழுந்து காபி போடும் நேரங்களில், இப்படித்தான் மனதில் திடீரென்று ஏதாவது ஒரு வரி கேட்கத்துவங்கும். தெரிந்த பாட்டாகத் தான் இருக்கும். பலமுறை கேட்ட வரியாகத் தான் இருக்கும். ஆனால், அன்றைக்கு ஸ்பெஷலாகத் தெரியும்.

எங்கள் வீட்டுச் சமையலறையில் ஒரு சின்ன வெள்ளைப் பலகையை வைத்திருக்கிறோம். என் மனதில் ரிப்பீட்டில் ஒலிக்கும் வரியை, என் கைப்பட, அந்தப் பலகையில் எழுதி வைப்பேன்.

தெரிந்த பாடல்வரிகளில் மிளிரும் தெரியாத அழகுகள் - 20200225

தன்முனைப்பு எனும் ஜீவநதி - 20191220

அராஜகம் என்கிற நல்ல சொல்லுக்கு இப்போது தவறான அர்த்தம் வந்துவிட்டது. அரசங்கத்தையோ பிற நிறுவனம் சார்ந்த அமைப்புகளையோ நம்பியிருக்காமல், அவற்றின் அதிகாரத்தின் அடிப்படையில் வரும் கட்டளைக்குக் கீழ்ப்படிந்துச் செய்வதாக இல்லாமல், தன்னார்வத்துடன் மக்கள் தாங்களே முன்வந்து சமுதாயத்துக்குத் தேவையான காரியங்களைச் செய்வதே ராஜகம் இல்லாத செயல்பாடு. அதுவே அ-ராஜகம். இந்தத் தனிமனித தன்னார்வ முனைப்பைக் கல்வி, மதம், குடும்பம் சார்ந்த நடவடிக்கைகளிலும் பயன்படுத்தலாம் என்று உரையாடினேன்.

எ.சீ.மொ.பே.21.வா நூல் பற்றி, வாசகர் ‘தீபா ஸ்ரீதரன்’ முகநூலில் எழுதிய பின்னூட்டமும், அடியேனின் பதிலும். மிக்க நன்றி, தீபா!

‘தீபா ஸ்ரீதரன்’ பின்னூட்டம்:

எளிதில் சீன மொழி பேச பயனுள்ள 21 வாக்கியங்கள்: இன்று தான் படிக்கத் துவங்கினேன். முன்னுரையைப் படித்தேன்,படித்தேன்,படித்தேன். ஆமாம், மூன்று முறை படித்தேன்.

இப்படியும் ஒருவரால் ஒரு மொழியைக் கற்றுக் கொடுக்க முடியுமா? - 20191208

- வாசகர் ‘தீபா ஸ்ரீதரன்’

பங்யோ: “நட்பே!” என்னும் சொல் போதும் - 20191121

நண்பர் இசைக்கலைஞர் ச்சாவ் என்பவருடன் நாங்கள் சந்தித்த நிகழ்ச்சி பல பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது. இதைக் குறித்துத் தமிழில் 'உண்மைச் சிறுகதை' எனும் வடிவத்தில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். இந்தக் கட்டுரைக்காக அந்த மிகப் பிரபலமான, இனிமையான 'பங்யோ' (நண்பர்) என்னும் பாடலின் சில வரிகளை மொழிபெயர்க்க வேண்டியிருந்தது.

எதற்குக் குறைவைக்க வேண்டும் என்று அந்தச் சிறிய பாடலை முழுமையாக மொழிபெயர்த்துவிட்டேன்!