சிந்தனை, செய்தி, சில்லறை...20191220

அராஜகம்:

தன்முனைப்பு எனும் ஜீவநதி

20191220

சமீபத்தில் ஸ்ரீபெரும்புதூர் சென்றிருந்தபோது, இந்தத் தன்னார்வம் கொண்ட இளைஞர்களுடன் ஒன்றரை மணிநேரம் செலவிட முடிந்தது.

அராஜகம் என்கிற நல்ல சொல்லுக்கு இப்போது தவறான அர்த்தம் வந்துவிட்டது. அரசங்கத்தையோ பிற நிறுவனம் சார்ந்த அமைப்புகளையோ நம்பியிருக்காமல், அவற்றின் அதிகாரத்தின் அடிப்படையில் வரும் கட்டளைக்குக் கீழ்ப்படிந்துச் செய்வதாக இல்லாமல், தன்னார்வத்துடன் மக்கள் தாங்களே முன்வந்து சமுதாயத்துக்குத் தேவையான காரியங்களைச் செய்வதே ராஜகம் இல்லாத செயல்பாடு. அதுவே அ-ராஜகம். இந்தத் தனிமனித தன்னார்வ முனைப்பைக் கல்வி, மதம், குடும்பம் சார்ந்த நடவடிக்கைகளிலும் பயன்படுத்தலாம் என்று உரையாடினேன்.

எனது “ஒரு கப்பல், நூறு துறைமுகங்கள்” என்னும் நூலுக்காக அராஜகம்/Anarchism பற்றிப் படித்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள முடிந்ததில் மகிழ்ச்சி.

#பயணி #பயணி_தரன் #நூறு_துறைமுகங்கள் #ஒரு_கப்பல்_நூறு_துறைமுகங்கள் #தன்முனைப்பு

#payani #payani_dharan #Nooru_ThuraimugangaL #Oru_Kappal_Nooru_ThuraimugangaL #anarchism


FASS FB Story:

"#தன்னார்வம் #அராஜகம் #FASS

சமூகப் பணிகளால் கிடைத்த உறவுகள் உண்மையானதாகவும், ஆற்றல்மிக்கதாகவும் இருப்பதை பல முறை உணர்ந்திருக்கிறேன்.

கடந்த ஞாயிறு அன்று தன்னார்வலர்களுக்கான ஒரு பயிலரங்கு..

சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகமான ஒரு நல்ல மனிதரின் உரை..

சுமார் ஒன்றரை மணி நேரம்..

தன்னார்வம் என்ற தலைப்பு

அவர் பேசவில்லை, உணர்த்தினார்.. எங்களை உணரச்செய்தார்.

எது தன்னார்வம்? அது அதிகாரத்தால், நிர்பந்தத்தால், பொருளுக்காக செய்யப்படுவதன்று என்று தொடங்கி "நீங்கள் அராஜகம் செய்கிறீர்கள்" என்று அராஜகம் என்ற சொல்லுக்கான பொருளை அழகாக தெளிவுபடுத்திய விதம் அருமையென்றால், அவரது #எளிமை ஆச்சரியம்..

கரவொலியுடன் வரவேற்கவில்லை, அவரை எங்கள் புன்னகை மனதார வரவேற்றது.

நன்றியுரை இல்லை..

அமைதி..அமைதி மட்டுமே

அவரின் பேச்சை முழுமையாக உள்வாங்கிக்கொண்டதன் விளைவு அது. கனத்த மனதுடன்.. நம்ம ஊருக்கு இன்னும் நிறைய செய்வோம் என்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்டே ஒரு குரூப் போட்டோ.

உண்மையானவர்களாலும், ஆற்றல்மிக்கவர்களாலும் மட்டுமே இது சாத்தியம்..

நன்றி Sridharan Madhusudhanan சார்! "