பதிப்பிக்கப்பட்ட நூல்கள்
வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை
இதுவரை தமிழில் வந்துள்ள மற்ற சீன நூல்களைப் போல் சீன மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தவற்றை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்காமல், நேரடியாகச் சீன மொழியிலிருந்தே தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட முதல் நூல். அது மட்டுமல்லாமல் கவித்தொகை (ஷிழ் சிங் - Shi Jing – Book of Songs) என்னும் முக்கியமான சீன இலக்கியத்துக்கும், தமிழின் சங்க இலக்கியத்துக்கும் உள்ள அதிசயக்கத்தக்க ஒப்புமைகளையும் இந்த நூல் சுட்டிக்காட்டுகிறது.
“கவித்தொகையின் பாடல்களைப் படிக்காமல் இருத்தல் என்பது, எதையுமே பார்க்காமல் சுவரின் பக்கம் திரும்பி நின்றுகொண்டிருப்பதைப் போன்றதல்லவா?”
- கன்ஃபூஷியஸ்
'கவித்தொகை’யைப் படித்தவர்களின் கருத்துகள்:
எழுத்தாளர் அ. முத்துலிங்கம்: கடந்த பத்து நாட்களாக ‘வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை தொகுப்பின் கவிதை வரிகளை திரும்பத் திரும்ப பிடித்தபடியே இருந்தேன். அவை தந்த இன்ப உச்சத்திற்கு அளவே இல்லை.
எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்: சீனாவின் முதல் நூல் என்று கருதப்படும் Shi Jing (Book of Songs) இரண்டாயிரத்து ஐநூறு வருஷங்களுக்கு முற்பட்டது. இதனை மொழியாக்கம் செய்வது பெரிய சவால். இதற்கு மொழியறிவு மட்டும் போதாது. சீனாவின் பண்பாடு குறித்தும், கவிதை மரபுகள் குறித்தும் ஆழ்ந்த அறிவும் ஈடுபாடும் தேவை. அதே நேரம், இவற்றை மூலத்தின் சுவை மாறாமல் தமிழாக்கம் செய்வதற்கு, தமிழில் தேர்ந்த கவித்துவமும் அவசியம். பயணி இந்த மூன்றிலும் தேர்ந்தவராக இருக்கிறார்.
பேராசிரியர் பா. மதிவாணன்: மூவாயிரமாண்டுப் பழமையும் முற்றிலும் வேறுபட்ட மொழியமைப்பையும் கடந்து சீனச் சாயல் சிதையாமல் தமிழாக்கியிருக்கும் ‘கவித்தொகை’யைத் தாம் கலந்து பயிலும் எவரும் காட்டும் வாழ்வின் துடிப்பையும் கவித்துவத்தையும் உணர முடியும்; தமிழ்ச் செவ்வியல் இலக்கியத் தொடர்புடையோரெனில், மேலும் ஆழ்ந்து நினைக்க முடியும்; பழந்தமிழ்ப் பனுவல்களைச் சீனச் செவ்வியல் ஒளியில் துலக்கிக் காட்ட முடியும்.
தினமணி: பிறமொழியிலிருந்து தமிழுக்குக் கொண்டுவரும் ‘கலைச் செல்வங்கள் யாவும்’ பெரும்பாலும் நேரடியாக வராமல் ஆங்கில மொழியின் மூலமாகவே வருகின்றன. முதல் முறையாக சீனமொழியிலிருந்து, அதுவும் சங்க இலக்கியம் போன்ற பண்டைய நூல் ஒன்று நேரடியாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.
அண்டை நாடு, பழமையான மொழி, வளமான இலக்கியம். நாம் தெரிந்துக்கொள்ள வேண்டாமா?
சீன எழுத்துக்களும் தமிழும் கொண்ட இரண்டாம் பதிப்பு.
176 பக்கம். 2ஆம் பதிப்பு. காலச்சுவடு பதிப்பகம். ASIN: B0824TL264
மாற்றம்
சீனாவின் நோபல் பரிசு பெற்ற ‘மோ-யான்’ எழுதிய சுயசரிதை நாவல்.
சீனாவின் கிராமத்துப் பள்ளிக்கூட வாழ்க்கையில் தொடங்கும் இரண்டு நட்புகள். ‘அட, நம்ம ஊர் மாதிரியே!’ எனத் தோன்ற வைக்கும் இளமைக்காலம். காலம் மாற, நாடும் நட்பும் மாறுகிறது–ராணுவம், இலக்கியம், வியாபாரம், சினிமா, தொழில் வளர்ச்சி, லஞ்சம் என்று.
சீனாவின் மாற்றங்களை ஓடையின் வேகத்துடன் பேச்சுநடையில் சொல்லும் படைப்பு.
88 பக்கம். 2ஆம் பதிப்பு. காலச்சுவடு பதிப்பகம். ASIN: B07PMJB56N
எளிதில் சீன மொழி பேச, பயனுள்ள 21 வாக்கியங்கள்
70 பக்கங்கள் கொண்ட நூல். முற்றிலும் இலவசம்.
நூலின் இலவச பிரதிக்கு, இந்தச் சிவப்பு பட்டனை க்ளிக் செய்யவும்:
GET FREE COPY
சீன மொழி – ஒரு அறிமுகம்
தமிழ் வழியே சீனமொழி பேச கற்றுக் கொடுக்கிறது. (“நீ ஹாவ்” என்றால் “வணக்கம்.”) “சீனம் சித்திரமொழியா?” போன்ற கேள்விகளுக்கும் விடை சொல்கிறது.
88 பக்கம். 4ஆம் பதிப்பு. காலச்சுவடு பதிப்பகம். ISBN 81-89359-03-7
நான்கு பதிப்புகள் கண்ட இந்நூல் இப்போது அச்சில் இல்லை.