உலக இலக்கியங்களை
நம்பிப் படிக்கலாம் — தமிழில்.
நம்பிப் படிக்கலாம் — தமிழில்.
தமிழ் வாசகர்ளுக்கு உகந்த உலகப் புகழ்பெற்ற கதைகளை, கவிதைகளைத் தேடுகிறீர்களா?
காலத்தை வென்ற சுவாரஸ்யமான இலக்கியங்களின் தமிழ் மொழியாக்கங்களைப் படிக்க விருப்பமா?
மூல இலக்கியத்தின் ஜீவனை, அந்தப் பண்பாட்டை, ஆழமாகப் புரிந்துகொண்டு மொழியாக்கம் செய்த நூல்கள் வேண்டுமா?
நீண்ட வரலாறு கொண்ட தமிழ்மொழிக்கும் சீனமொழிக்கும் இடையே நேரடி மொழியாக்கம் செய்த முதல் நூல் என்னுடைய 'வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை | கவித்தொகை: சீனாவின் 'சங்க இலக்கியம்' நூல்.
இந்திய அயலுறவுப் பணி (IFS) அதிகாரி. சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் சீனமொழி கற்றேன். பல நாடுகளில் வாழ்வதும் அந்தப் பண்பாட்டில் ஆழ்ந்து தமிழ் வாசகருக்கு உகந்த நூல்களைத் தேர்ந்தெடுப்பதும் அந்நாட்டு மக்களுடன் கலந்துரையாடி மொழியாக்கத்தைச் செம்மைப்படுத்துவதும் சாத்தியமாகின்றன.
தமிழ் இலக்கியத்துக்கான பங்களிப்புக்காக, SPARROW Literary Award விருது அளிக்கப்பட்டது.
சீனாவின் முதல் நூல் என்று கருதப்படும் Shi Jing (Book of Songs) இரண்டாயிரத்து ஐநூறு வருஷங்களுக்கு முற்பட்டது. இதனை மொழியாக்கம் செய்வது பெரிய சவால். இதற்கு மொழியறிவு மட்டும் போதாது. சீனாவின் பண்பாடு குறித்தும், கவிதை மரபுகள் குறித்தும் ஆழ்ந்த அறிவும் ஈடுபாடும் தேவை. அதே நேரம், இவற்றை மூலத்தின் சுவை மாறாமல் தமிழாக்கம் செய்வதற்கு, தமிழில் தேர்ந்த கவித்துவமும் அவசியம். பயணி இந்த மூன்றிலும் தேர்ந்தவராக இருக்கிறார்.
- எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்
உலகத் தரமான படைப்பு என்பதற்கு இந்நாவல் சிறந்த உதாரணம். சிறந்த மொழிபெயர்ப்பு.
- எழுத்தாளர் இமையம்
அற்புதமான வாசிப்பு அனுபவம். சமீபத்தில் இவ்வளவு பரபரப்பான அதே சமயம் அங்கங்கே அங்கதம் நிரம்பிய நாவல் வாசித்து நெடுநாள் ஆயிற்று. ஓர் ஓநாயின் பாய்ச்சலுடன் செல்கிறது இந்த நாவல்.
- அமேசான் நூல் மதிப்புரை
கடந்த பத்து நாட்களாக ‘வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை' தொகுப்பின் கவிதை வரிகளை திரும்பத் திரும்ப பிடித்தபடியே இருந்தேன். அவை தந்த இன்ப உச்சத்திற்கு அளவே இல்லை.
- எழுத்தாளர் அ. முத்துலிங்கம்
மிக நெடியதும் வளமானதுமான சீன மரபு இலக்கியக் கருவூலத்திலிருந்து எந்த நூலும் தமிழில் இதுவரை நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டதில்லை என்ற வசை இன்று பயணியால் கழிந்தது. கவித்தொகை பற்றிப் பயணி வழங்கியுள்ள அறிமுகக் கட்டுரைகளின் வலு, கவிதைகள் பரிமளிப்பதற்கு இன்றியமையாததாக இருக்கிறது. சீன இலக்கியப் பெரும்பரப்புக்குக் கைகாட்டி மரமாக இவை உள்ளன.
- ஆராய்ச்சியாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி
நூல்களின் சில பகுதிகளை இலவசமாகப் படியுங்கள்!
நூல்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்!
பிடித்த நூலை வாசித்து இந்த உலகப் பயணத்தைத் தொடங்குங்கள்!
எளிய முறையில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள இந்த நூல்களைத் தவறவிடுவது, இந்தக் காலத்தை வென்ற கதைகளையும் கவிதைகளையும் அனுபவிக்கும் வாய்ப்பை இழப்பதாகும். இந்த உலகப்புகழ் பெற்ற படைப்புகள் தரும் வாசிப்பு அனுபவத்தை, நெகிழ்ச்சியை, பண்பாட்டுப் புதையலைக் கண்டெடுக்கும் மகிழ்ச்சியைத் தவறவிடாதீர்கள்.
சமீபத்தில், 'அலியும் நினோவும்' நாவலைத் தமிழாக்கம் செய்திருக்கிறேன். 30+ மொழிகளில், 100+ பதிப்புகளுக்கு மேல் கண்ட இந்த நூல், இப்பொழுது, முதன்முறையாக, இந்தியாவில் தமிழில் வந்துள்ளது.
இதைக் கொண்டாடும் வகையில், நாவலில் அலியும் நினோவும் தோட்டத்தில் சந்திக்கின்ற கதைப் பகுதியை இலவசமாக வழங்குகிறேன்.
அந்தக் கதைப் பகுதி நேரடியாக உங்கள் மின்னஞ்சலுக்கு வர, மின்னஞ்சலைப் பதிவு செய்யுங்கள். கூடவே, ‘எளிதில் சீன மொழி பேச, பயனுள்ள 21 வாக்கியங்கள்’ என்னும் 75 பக்க நூலை இலவசமாகப் பெறுங்கள்.