இதுவரை 30 மொழிகளில் வெளிவந்து, 100 பதிப்புகளுக்கு மேல் கண்ட நூல் இது. இப்போது, பயணி தரனின் மொழியாக்கத்தில்!
20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ரஷ்யா, ஈரான், அஜர்பைஜான், ஜியார்ஜியா பகுதிகளின் கொந்தளிப்பான பின்னணியில் அமைந்த அழுத்தமான அழகான காதல் கதை.
இஸ்லாமிய அஜர்பைஜானி இளைஞருக்கும் கிறிஸ்துவ ஜார்ஜிய இளவரசிக்கும் இடையிலான ஆழமான, சிக்கலான காதலைப் பேசும் இந்தக் கதை வரலாறு, அடையாளம், பண்பாடு என்கிற அடுக்குகளில் பயணித்துக் காலத்தை வெல்லும் படைப்பாக மாறுகிறது.
இந்த நூலில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள பழமையான சீனக் கவிதைகளைப் பற்றி கன்ஃபூசியஸ் சொன்னது: இவற்றைப் படிக்காமல் இருப்பது, எதையுமே பார்க்காமல் சுவரைப் பார்த்துத் திரும்பி நிற்பது போன்றது.
வாசிப்பில் வளர்ச்சி காணும் நீங்கள் இந்தக் கவிதைகளைப் படிக்க வேண்டாமா?
ரூ 250/- மட்டும். 176 பக்கம். 2ஆம் பதிப்பு. காலச்சுவடு பதிப்பகம்.
சீனாவிலிருந்து இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஒரே ஆசிரியரின் சுயசரிதைக் கதை. கூடவே, சீனாவைப் பற்றி, அதன் சமீபத்திய மாற்றங்களைப் பற்றிய சுவாரஸ்யமான விவரணைகள் (ராணுவம், இலக்கியம், வியாபாரம், சினிமா, தொழில் வளர்ச்சி, லஞ்சம்).
வாசிப்பில் வளர்ச்சி காணும் நீங்கள் இந்தச் சுயசரிதை நாவலைப் படிக்க வேண்டாமா?
ரூ 125/- மட்டும். 88 பக்கம். 2ஆம் பதிப்பு. காலச்சுவடு பதிப்பகம்.
உலகிலேயே அதிகமான மனிதர்களால் பேசப்படும் மொழி. உலகின் பழமையான மொழிகளில் ஒன்று. நம் அண்டை நாட்டு மொழி. வணிகம், இலக்கியம், சுற்றுலா என பல பயன்கள்.
வாசிப்பில் வளர்ச்சி காணும் நீங்கள் சீனமொழியைக் கொஞ்சமாவது அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டாமா?
75 பக்கங்கள் கொண்ட நூல். முற்றிலும் இலவசம்.
நூலின் இலவச பிரதிக்கு, உங்கள் மின்னஞ்சலை இங்கே பதிவு செய்யுங்கள்.
தமிழ் வழியே சீனமொழி பேச கற்றுக் கொடுக்கிறது. (“நீ ஹாவ்” என்றால் “வணக்கம்.”) “சீனம் சித்திரமொழியா?” போன்ற கேள்விகளுக்கும் விடை சொல்கிறது.
88 பக்கம். 4ஆம் பதிப்பு. காலச்சுவடு பதிப்பகம். ISBN 81-89359-03-7
நான்கு பதிப்புகள் கண்ட இந்நூல் இப்போது அச்சில் இல்லை.