மாற்றம்

சீனாவின் நோபல் பரிசு பெற்ற ஒரே எழுத்தாளர் ‘மோ-யான்’ எழுதியது.

சீனத்திலிருந்து தமிழுக்கு நேரடி மொழிபெயர்ப்பு.

சீனாவின் நோபல் பரிசு பெற்ற ‘மோ-யான்’ எழுதிய சுயசரிதை நாவல்.

சீனாவின் கிராமத்துப் பள்ளிக்கூட வாழ்க்கையில் தொடங்கும் இரண்டு நட்புகள். ‘அட, நம்ம ஊர் மாதிரியே!’ எனத் தோன்ற வைக்கும் இளமைக்காலம். காலம் மாற, நாடும் நட்பும் மாறுகிறது–ராணுவம், இலக்கியம், வியாபாரம், சினிமா, தொழில் வளர்ச்சி, லஞ்சம் என்று சீனாவின் மாற்றங்களை ஓடையின் வேகத்துடன் பேச்சுநடையில் சொல்லும் படைப்பு. சீனாவும் சீனர்களின் வாழ்வும் மாறியதைப் பதிவுசெய்யும் கதை.

***

“நீ போயிட்டா, உன் அப்பா, உன் அம்மா, உன் தம்பி, தங்கச்சிங்க என்ன ஆவாங்க?”ன்னு கேட்டேன்.

“கம்யூனிஸ்ட் கட்சி அவங்கள பட்டினிலெ சாக விட்றாது”ன்னு சொன்னான்.

“வடகிழக்குப் போய் என்ன பண்ணப் போறே?”ன்னு கேட்டேன்.

“தெரியாது. சாவற வரைக்கும் இங்கயே கிடக்கிறத விட அது மேல். என்னப் பாரு. முப்பது வயசாகப் போகுது. இன்னும் பொண்டாட்டி கூட அமையல. இங்கருந்து வெளியப் போயிடணும். மரம் நகர்ந்தா சாவும், மனுஷன் நகர்ந்தா வாழுவான்.”

***

88 பக்கம். 2ஆம் பதிப்பு. காலச்சுவடு பதிப்பகம். ASIN: B07PMJB56N