வாங்க, சீனமொழி பேசலாம்!

பயணம், வணிகம், வகுப்பு, உணவகம், கடைத்தெரு என பல சூழல்களிலும் எளிதே சீனமொழி பேச உதவும் நூல்.

(தற்போது எழுதிக்கொண்டிருக்கும் நூல்)

பெரியவங்க சின்னவங்க

20191203

நாங்கள் பெய்சிங்கில் வசித்தபோது, எங்கள் அடுக்குமாடிக் கட்டிடத்தில் இன்னொரு வீட்டில் வசித்த என் சக அதிகாரியின் மனைவியிடமிருந்து போன் வந்தது. போய் விசாரித்தபோது, குழாய் ரிப்பேர் செய்ய வந்தவரும் இந்தப் பெண்மணியும் வாசலில் நின்றிருந்தார்கள். அந்த அதிகாரி அப்போது வீட்டில் இல்லை. அந்தப் பெண்மணிக்கோ சீன மொழி கொஞ்சமும் தெரியாது. அவர் என்னிடம், “இவர் கிச்சன் குழாய் ரிப்பேர் செய்ய வந்துவிட்டு உள்ளே போய் வேலையைப் பார்க்காமல் என்னெவோ சைனீஸில சொல்றார். கொஞ்சம் என்னன்னு கேளுங்க” என்றார். சீன மொழியில் நான் அந்த நபரிடம் விசாரித்தேன். அந்தக் குழாய் ரிப்பேர்காரர் சொன்னார்: “இந்த வீட்ல ஒரு அம்மா குழாய் ரிப்பேர் செய்யணும்னு கூப்டுருக்காங்க. இந்தக் கொழந்த கிட்ட அவங்க அம்மாவ கூப்பிடுன்னு மறுபடி மறுபடி சொல்றேன், இது கூப்பிட மாட்டேங்குது.”

நான் சுதாரித்துக்கொண்டு, இந்தக் ‘கொழந்த’ தான் அந்த ‘அம்மா’ என்று விளக்கிச் சொல்லி அவரை குழாய் ரிப்பேர் செய்ய உள்ளே அனுப்பும் முன்பு அவர் சொன்னார்:

“நீங்கள் இந்தியர்கள். உங்களிடம் இரண்டு பிரச்சனைகள். ஒன்று, எல்லோரும் ஒரே மாதிரி இருக்கிறீர்கள். இரண்டு, உங்களின் முகத்தைப் பார்த்து யாராலும் உங்கள் வயதைக் கணிக்க முடியாது.”


க்கும்.

நமக்கும் அப்படித்தான் இருக்கும்.


எனவே, “வணக்கம்” சொல்ல, பெரியவர் என்று ‘தெரிந்தால்...’

“நீன் ஹாவ்!” சொல்லலாம்.

இல்லாவிட்டால் “நீ ஹாவ்!” சொல்லலாம்.

“என்ன, பெரியவங்க சின்னவங்க மரியாதை இல்லாம?” என்று யாரும் கோபித்துக்கொள்ளமாட்டார்கள்.


“எளிதில் சீன மொழி பேச, பயனுள்ள 21 வாக்கியங்கள்” நூலிலிருந்து.

70 பக்கம். உங்களது இலவச பிரதிக்கு,


#பயணி

#பயணி_தரன்

#தமிழ்வழி_சீனம்

#வாங்க_சீன_மொழி_பேசலாம்


ஓவியம்: எஸ். இளையராஜா

எளிதில் சீன மொழி பேச, பயனுள்ள 21 வாக்கியங்கள்

70 பக்கங்கள் கொண்ட நூல். முற்றிலும் இலவசம்.

நூலின் இலவச பிரதிக்கு, இந்தச் சிவப்பு பட்டனை க்ளிக் செய்யவும்:

GO TO DOWNLOAD

தமிழ்ல படிங்க. சீன மொழி பேசுங்க

நீ ஹாவ்! = வணக்கம்!

  • பூச்சாண்டிகளுக்குப் பயப்படாதீங்க!
  • புது மொழி கற்க உதவும் 21 முக்கிய வாக்கிய அமைப்புகள்
  • 20 ஆண்டு சீன மொழிப் பயணம். சீன மொழித் தொடர்புடைய எனது 4வது நூல்
  • சூழலுக்கு ஏற்றமாதிரி பேச உதவும் ‘டிப்ஸ்.’ கூடவே கொஞ்சம் குட்டிக்கதைகள். அவை இல்லாமலா?

சீனத்துக்கும் தமிழுக்கும் பாலம் அமைத்துப் புதுத்தடம் பதிக்கும் பயணியின் நூல்கள்

இன்னும்...