“எப்படி இதையெல்லாம் ஞாபகம் வெச்சிக்கிறீங்க?” என்று யாராவது என்னிடம் கேட்கும்போதெல்லாம் நான் இரண்டு பதில்களையே மீண்டும் மீண்டும் சொல்லுவேன். அதில் இரண்டாவது பதில் பொய்.
முதல் பதில், “இது எனக்குப் பிடித்த விஷயம். அடிக்கடி இது பேச்சில், நினைவில் இருக்கும். அதனால் மறப்பது இல்லை.”
இரண்டாவது பொய்யான பதில்: “அப்படியெல்லாம் ஒன்னும் இல்லைங்க. சும்மா நினைவில் இருந்தது.”
இரண்டாவது பொய்யான பதிலுக்கு மாறாக, நான் ‘linking, visualization, pegging, spaced repetition’ என்று பல விஷயங்களைச் சொல்ல வேண்டியிருக்கும். அது எல்லோருக்கும் சுவாரஸ்யப்படும் என்று சொல்ல முடியாது என்பதால் ‘புரை தீர்ந்த நன்மை பயக்கும்’ என்று எளிமையான ஒரு பொய் சொல்லி அவர்களது நேரத்தை மிச்சப்படுத்துவேன்.
ஆனால், நான் என் பேச்சுகளுக்குப் பெரும்பாலும் குறிப்புகளைப் பயன்படுத்துவதில்லை - ஒரு மணி நேர பேச்சுக்களுக்கும் கூட! 😲 நான் UPSC தேர்வெழுதியபோது, திருக்குறளில் காமத்துப்பால் முழுக்க ஒரு பாடமாக இருந்தது. அத்தனையையும் மனப்பாடம் செய்துவிட்டேன். 🤯 அதற்குப் பிறகு தேர்வு அறையில் கட்டுரை வடிவம் பற்றி மட்டும் யோசித்தால் போதும் என்று ஆனது.
ஆனால், இன்னும் பல வாழ்க்கைச் சூழல்களில் மறதிப் பிரச்சனை உண்டு. (தன் குறிப்பு: அடுப்பில் பால் வெச்சிட்டு பாட்டு கேட்கக்கூடாது)
ஆனால், விஷயம் இது தான்: ஞாபகம் என்பது கற்றுக்கொள்ளக்கூடிய, மேம்படுத்தக்கூடிய, பயனால் திடமாகும் ஒரு திறமை தான்.
ஞாபகத் திறன், கற்றலைக் கற்றல் என்னும் விஷயங்களில் எனக்குக் கண்திறப்பாக இருந்த ஒரு நூலைப் பற்றி அறிமுகம் செய்யும் ஒரு வீடியோவை வெளியிடுவதில் மகிழ்ச்சி.
📹 உங்கள் தற்போதைய முயற்சிகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
உங்கள் மூளையைக் கூடுதலாகப் பயன்படுத்துவது எப்படி?: இந்த நிரூபிக்கப்பட்ட உத்திகளால் உங்கள் ஞாபகத்திறனை வளருங்கள்!