3-2-1: இன்றைய மொழி, முதலாளி கதை, ‘நாயி நரி பூனை’

3 குறிப்புகள், 2 மேற்கோள்கள், 1 கேள்வி

(5 ஜூன் 2021 - இந்த ஆண்டின் 12வது கடிதம்)

வணக்கம், நண்பரே!

நலந்தானே? உலகின் பல நாடுகளிலிருந்து உங்களைப் போன்ற வாசிப்பில் வளர்ச்சி காணும் நூற்றுக்கணக்கான நண்பர்கள் இந்த ‘3-2-1: பயணிக் குறிப்புகள்’ மின்னஞ்சல் கடிதத்தைப் படிக்கிறார்கள். இதோ என்னிடமிருந்து 3 பயணிக் குறிப்புகள், பிறரிடமிருந்து 2 மேற்கோள்கள், உங்களுக்கு 1 கேள்வி.

இதை ஒரே கிளிக்கில் உங்கள் Facebookஇல் பகிருங்கள்:

என்னிடமிருந்து 3 பயணிக் குறிப்புகள்

(i)

அப்பா மகளுக்குச் சொல்லிய பொருளாதாரக் கதை

எனக்கு பலவகைப்பட்ட ஆர்வங்கள் இருக்கு. அதனாலே பலவகைப்பட்ட நூல்களைப் படிப்பேன். YouTube சானல் துவங்கி என்னோட முதல் வீடியோவா எதைப் போடலாம்னு கொஞ்சம் குழப்பம். முக்கியமா, கதையா, அபுனைவா? ஆனா, ரெண்டுமே ஒரே நூல்ல கிடைச்சுது:

‘பொருளாதாரம் பற்றி என் மகளுக்கு அளித்த விளக்கம்: முதலாளியத்தின் சுருக்கமான வரலாறு’ - ஆசிரியர்: யானிஸ் வருஃபாகிஸ். (ஆங்கிலத் துணைத் தலைப்புல, The Story of Capitalism)

வாங்க, சேர்ந்தே பயணிப்போம்!

நண்பர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புகிறேன். ஒவ்வொரு வாரக்கடைசியிலும் வரும் இந்தக் கடிதத்தில் என்னிடமிருந்து 3 விஷயங்கள், பிறரிடமிருந்து 2 மேற்கோள்கள், நீங்கள் சிந்திக்க 1 கேள்வி இருக்கும். புது பதிவுகள், செய்திகள் தவறாமல் உங்களுக்கு வரும். கூடவே, ‘எளிதில் சீன மொழி பேச பயனுள்ள 21 வாக்கியங்கள்’ என்னும் 75 பக்க நூல் இலவசம். உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்யுங்கள்:

“இளைய தலைமுறைக்குப் பொருளாதாரம் பற்றித் தெரிஞ்சிருக்கணும். பொருளாதாரம் புரியலைன்னா அரசியல் புரியாது. ஆனா, இளைஞர்களுக்கும் புரியறமாதிரி சொல்லணும். அது இந்த நூல்”ன்னு சொல்றார் ஆசிரியர். இந்தப் பொருளாதாரம் பற்றிய உலகப் பிரபலமான நூலை முதல் வீடியோவில அறிமுகப்படுத்த முடிஞ்சதுக்கு மிக்க மகிழ்ச்சி.

கூடவே, இந்த நூல் பற்றிய என்னோட புரிதல்களை ஒரு நோட்ஸ் மாதிரி எடுத்து, சுருக்கி, ஒரு ஒரு பக்க PDF கோப்பா சேமிச்சு வெச்சிருக்கேன். நீங்க நேரடியாய் அந்த PDF கோப்பை பெற்றுக்கலாம்.

இந்த நூல் பற்றிய 1 பக்க PDF பயணியின் குறிப்புகளைப் பெற: சுட்டி



(ii)

நாயி நரி பூனைக்கும்

World Biodiversity Day மே மாதம் 22 தேதி வந்தபோது Biodiversity என்பதைத் தமிழ்ல எப்படிச் சொல்லலாம்னு நண்பர்கள் கிட்டே கேட்டிருந்தேன். வந்த கருத்துக்களை அலசி, ‘உயிரினப் பல்வகைமை’ன்னு இப்போதைக்கு மனதில் வெச்சுக்கறேன்.

அந்த “உலக உயிரினப் பல்வகைமை நாள்” அன்னைக்கு (மறுபடியும்) எஞ்சாயி எஞ்சாமி பாட்டைக் கேட்டபோ, இந்த வரி தலையைத் தூக்கிப் பார்த்தது:

நாயி நரி பூனைக்குந்தான் இந்த

ஏரி குளங்கூட சொந்தமடி

சக மனுஷங்களை விலங்குகளைவிடக் கேவலமாக நடத்தி, அவங்க ஏரி, குளம், ஏன், சுடுகாட்டைக் கூட, சமமாக பாவிக்கவிடாம செய்யற கொடூரர்கள் மத்தியில இப்படி ஒரு வரி வரும்போது ஆழமாக மூச்சு இழுத்துக்கணும். இது சும்மா வராது. ‘படைப்பாளிகளின் பல்வகைமை’ தான் இந்த மாற்றங்களைக் கொண்டுவரும்


(iii)

கருவிகளைக் கொண்டாடு

ஒரு வேலை செய்யும்போது, அந்த வேலைக்கான கருவியும் செய்ய வேண்டியிருந்தா, உற்சாகமாயிடுவேன். ஏதோ இல்லாத ஒன்னைச் செய்யறோம்னு புரிஞ்சிடும்.

தமிழ் வழியே சீனமொழி கத்துக்கறது பத்தி ஒரு நூல் எழுதிகிட்டுருக்கேன். ஒவ்வொரு வகையிலும் புதுப்புது கருவிகள் தேவைப்படற ப்ராஜெக்ட். சீனமொழியோட கொடுக்கல்-வாங்கல் இருக்கிற ஆங்கிலம் மாதிரியான மொழிகள்லயே பல உத்திகளும் கருவிகளும் இல்லாம இது மாதிரியான நூலைப் படைக்க முடியாது. தமிழ்ல கேட்கணுமா? அதனாலே, கருவிகள் செஞ்சு, அதுக்கு அப்புறம் அந்தக் கருவிகளைக் கொண்டு வேலையைச் செய்யணும்.

ஏதோ இல்லாத ஒன்னைச் செய்யறோம்ங்கற மகிழ்ச்சி தான் இந்தக் கட்டங்களைத் தாண்ட உதவுது.

இதை ஒரே கிளிக்கில் உங்கள் Facebookஇல் பகிருங்கள்:

பிறரிடமிருந்து 2 மேற்கோள்கள்

(i)

இன்றைய மக்களின் மொழி பற்றி லாரன்ஸ் லெஸ்ஸிக்

“‘எழுதுதல்’ என்பது நம் காலத்தின் லத்தீன் மொழி. இன்றைய மக்களின் மொழி காணொளியும் ஒலியும்.”

— லாரன்ஸ் லெஸ்ஸிக், ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர்




(ii)

கருத்து மாற்றம் பற்றி ஆதம் கிராண்ட்

“உன் கருத்தை நீயே வைத்துக்கொண்டால் நீ உன் கருத்தை வைத்துக்கொள்ளலாம். ஆனால், நீ உன் கருத்தை வெளியே சொன்னால், அதை விட சிறப்பான வாதமோ, அந்தக் கருத்தை மறுக்கும் வலுவான உண்மைகளோ தெரியவந்தால், நீ உன் கருத்தை மாற்றிக்கொள்ளும் பொறுப்பு உனக்கு இருக்கிறது. அதாவது, நீ உன் கருத்தை உரக்கச் சொன்னால், அதை மாற்றிக்கொள்ளவும் தயாராக இருக்கவேண்டும்.”

— ஆதம் கிராண்ட் (Adam Grant)

உங்களுக்கு 1 கேள்வி

இதையெல்லாம் நாம் தனியே நிறுத்தி யோசிப்பதில்லை. எனவே, உங்களுக்கு ஒரு கேள்வி:

இன்றைய தலைமுறையின் மொழி காணொளி என்று உங்களுக்கும் தோன்றுகிறதா?

உங்களைப் போலவே வாசிப்பில் வளர்ச்சி காணும்இன்னொரு நண்பருக்கு இந்தக் கடிதத்தை அறிமுகப்படுத்துங்களேன்?

இந்தச் சுட்டியை நண்பருக்கு வாட்ஸப்பில் அனுப்புங்கள்: https://www.payani.com/Newsletter

பயணத்தில் மீண்டும் சந்திக்கும் வரை,


அன்புடன்

பயணி தரன்

உலகில் முதலாவதாக: சீனத்திலிருந்து தமிழுக்கு நேரடி மொழிபெயர்ப்பு நூலின் ஆசிரியர்.

- வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை (கவிதை, கட்டுரை)

- மாற்றம் (நாவல்)

இதை ஒரே கிளிக்கில் உங்கள் Facebookஇல் பகிருங்கள்: