சிந்தனை, செய்தி, சில்லறை...20200225

தெரிந்த பாடல்களின் வரிகளில் மிளிரும் தெரியாத அழகுகள்

20200225

உங்களுக்கும் நிச்சயம் இந்த அனுபவம் இருக்கும். திடீரென்று ஏதாவது ஒரு பழைய பாடலின் வரி உங்கள் மனதில் உட்கார்ந்து கொள்ளும். அன்றைக்கெல்லாம் நாம் வேலை, காகிதம், சந்திப்பு என்று அலைந்துகொண்டிருந்தாலும், அந்த ஒற்றை வரி மட்டும் அடம்பிடிக்கும் குழந்தையாய் நம் கவனத்தை இறுக்கக் கட்டிக்கொண்டு விட்டுவிடாமல் கூடவே வரும்.

நான் காலையில் எழுந்து காபி போடும் நேரங்களில், இப்படித்தான் மனதில் திடீரென்று ஏதாவது ஒரு வரி கேட்கத்துவங்கும். தெரிந்த பாட்டாகத் தான் இருக்கும். பலமுறை கேட்ட வரியாகத் தான் இருக்கும். ஆனால், அன்றைக்கு ஸ்பெஷலாகத் தெரியும்.

எங்கள் வீட்டுச் சமையலறையில் ஒரு சின்ன வெள்ளைப் பலகையை வைத்திருக்கிறோம். என் மனதில் ரிப்பீட்டில் ஒலிக்கும் வரியை, என் கைப்பட, அந்தப் பலகையில் எழுதி வைப்பேன்.

அந்த ஒரு வரியை நாளெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, அதிலிருந்து அழகு சொட்டிக்கொண்டேயிருக்கும். அத்தனை அழகும் இத்தனை நாள் எனக்காகக் காத்துக் கொண்டிருந்தது போல் இருக்கும்.

(இந்தப் பழக்கத்தில் இன்னொரு கூடுதல் பலன்: காபி சரியாக வரவில்லை என்றாலும் ரொம்பவும் கவலையாக இருக்காது.)

அப்படி நான் கைப்பட எழுதிய பாடல் வரிகளின் சில ஒளிப்படங்கள் இங்கே உங்களுக்காக.

வான் நிலா

மன்னவன் வந்தானடி

மலர்ந்தும் மலராத

தண்ணீர் விட்டோ வளர்த்தோம்

அழகிய தமிழ் மகள் இவள்

உன் கண்ணில் நீர் வழிந்தால்

சொல்லத்தான் நினைக்கிறேன்

ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு

உங்கள் மனதில் மீண்டும் மீண்டும் அழகு சொட்டும் பாடல் வரிகள் எவை?

எழுதுங்கள்: dharan@payani.com