பயணியின் பதிவுகள்

இந்தப் பக்கத்தில் எனது முக்கியமான பதிவுகளைப் படிக்கலாம். மனிதர்கள், இலக்கியம், அனுபவங்கள் என்று வாழ்வின் பாதையில் நாம் கவனிக்கும் விஷயங்கள் பல. இவற்றில், நான் ரசித்த, பயனுள்ள, தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை இங்கே எழுதுகிறேன்.

புதிய பதிவுகள் வெளியான உடனே தகவல் பெற, உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.

கீழே, முந்தையப் பதிவுகள். ஒன்றோ இரண்டோ படிப்போமா?

வாங்க, சேர்ந்தே பயணிப்போம்!

நண்பர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புகிறேன். ஒவ்வொரு வாரக்கடைசியிலும் வரும் இந்தக் கடிதத்தில் என்னிடமிருந்து 3 விஷயங்கள், பிறரிடமிருந்து 2 மேற்கோள்கள், நீங்கள் சிந்திக்க 1 கேள்வி இருக்கும். புது பதிவுகள், செய்திகள் தவறாமல் உங்களுக்கு வரும். கூடவே, ‘எளிதில் சீன மொழி பேச பயனுள்ள 21 வாக்கியங்கள்’ என்னும் 75 பக்க நூல் இலவசம். உங்களது மின்னஞ்சலைப் பதிவு செய்யுங்கள்:

நான் ஏன், எப்படி, இந்தப் பழக்கத்தை 20+ ஆண்டுகளாகத் தொடர்கிறேன்?

YouTube காணொளி: ஜிம்முக்குப் போவது அவசியம் இல்லை என்று வாதிட்டுக்கொண்டிருந்த நான், 30 வயதுக்கு மேல் உடற்பயிற்சியைத் துவக்கக் காரணம், ஹாங்காங்கில் ஒரு டாக்டர். “உடற்பயிற்சி தான் மூளைக்குக் காலை உணவு” “Exercising is the breakfast for the brain” என்று எனக்குப் புரியவைத்தார்...

படிக்க:

அப்பாவும் மகனும் - ஒரு உரையாடல்

அப்பா, ஞாபகம் இருக்கா? நான் மொதமொதல்ல pop filter இல்லாம டீ வடிகட்டியையும் என்னோட ஜட்டித் துணியையும் வெச்சி ரெக்கார்ட் பண்ணினேனே!”

“நல்லா ஞாபகம் இருக்கு. அதை வெச்சே நீயும் கீர்த்தியும் வயசு வித்தியாசம் இல்லாமல் எல்லாரும் கலந்துக்கிற “Song for Better Fiji” தேசிய அளவிலான இசைப் போட்டியில ஆயிரம் டாலர் முதல் பரிசு வாங்கினீங்க!” படிக்க:

உலகை அழிக்கும் வைரஸ்களா நாம்?

YouTube காணொளியில் நூல் அறிமுகம்:

பொருளாதாரம் பற்றி என் மகளுக்கு அளித்த விளக்கம்: முதலாளியத்தின் சுருக்கமான வரலாறு - யானிஸ் வருஃபாகிஸ்

+ 1 பக்க pdf குறிப்புகள். படிக்க:

ஏமாற்றிய கர்ணனும் வாரி வழங்கும் பரியேறும் பெருமாளும்

நேற்று, மாரி செல்வராஜின் கர்ணன் பார்த்தோம். மாரி செல்வராஜ் நல்ல படம் எடுத்திருக்கிறார். ஆனால், கர்ணன் நல்ல படம் அல்ல. இன்னும் நல்ல படங்கள் எடுப்பார் என்கிற நம்பிக்கை இருக்கிறது. இந்தப் படத்திலும் அதற்கான சத்தியங்கள் தலைகாட்டுகின்றன. படிக்க:

அநியாய ‘அமைதி’ (Silence for Injustice)

“இந்த வாட்ஸாப் குழுவில் இதுபோன்ற விஷயங்களைத் தவிர்க்கலாமே?” மாதிரியான செய்திகள் இப்போ அதிகம் வருது. “முன்னாடியெல்லாம் நாம எவ்வளவு அன்பா ஒத்துமையா வேறுபாடு பாராட்டாம இருந்தோம்”ன்னு ஒரு பொற்காலத்தை இழந்துட்ட மாதிரி ஃபீலிங்கோட அதைச் சொல்றாங்க. நிஜமா அப்படியா பொற்காலமாவா இருந்துது? முந்தைய அநியாயத்து மேல கட்டப்பட்ட ‘அமைதி,’ இந்தக் காலத்துலயும் எதிர்காலத்துலயும் அநியாயத்தை வளர்க்கத் தான் உதவுது. படிக்க:

புத்தர் காலத்துப் பெண் துறவிகளின் கவிதைகள்

‘தெரீ’ என்றால் பெரியவர்கள், மூத்த பெண் துறவிகள் என்று பொருள். கி.மு. 400 வாக்கில் காஞ்சிபுரத்தில் பிறந்து புத்தத் துறவியான தர்மபாலர் உரை எழுதித் தொகுத்துள்ளார். ஆங்கிலம் வழியாக அதில் சில கவிதைகளை மொழிபெயர்த்தேன். படிக்க

வைரஸ்களைப் பற்றிய 9 அடிப்படைத் தகவல்கள்

வைரஸுக்கு உயிர் உண்டா? எப்படிப் பரவுகின்றன? எத்தனை? வைரஸ்களை ஒழிக்க முடியாதா? COVID-19 என்னும் கொரோனா வகை வைரஸ் பற்றி சரியான புரிதல் வேண்டும் என்றால், பொதுவாக வைரஸ்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். படிக்க

எங்கள் குடும்பப் பாடல்கள். உலக குடும்ப நாள் (மே 15)

தமிழ் சினிமாக்களில் குடும்பப் பாடல்கள் வரும். அப்போதெல்லாம் சிரித்திருக்கிறேன். இப்போது, எங்கள் குடும்பப் பாடல்கள் பற்றி சிறுகுறிப்பு வரைக. நாங்கள் பள்ளியில் படித்தபோது வைதேகி ஒரு திருட்டுக்கடிதம் கொடுத்தாள். படிக்க

நகர்வதென்றும் நிலைக்கும். —பசவண்ணா

கர்நாடகத்தில் 12ஆம் நூற்றாண்டில் மதச் சீர்த்திருத்தத்துக்குப் பங்களித்த பசவண்ணாவின் பிறந்தநாள் இன்று.

பெருநதிகள் சங்கமிக்கும் பேரருளே, கேளேன்... படிக்க

என் ராஜ்குமார் சித்தப்பாவுக்காக

நான் எழுதிக்கொண்டிருக்கும் நூலில் ஒரு அத்தியாயம் ராஜ்குமார் சித்தப்பா பற்றியது. இதைப் படிக்காமலே அவர் கொரோனாவில் இறந்துவிட்டார். படிக்க

உள்ளங்கையில் தந்தவர்: பேராசிரியர் ஆல்பர்ட்

ஒரே ஒருமுறை சந்தித்தது. நாடக எழுத்துப்பட்டறை அடிப்படையாக இருந்தாலும், ஒரு ஓவியம் போலத்தான் பேராசிரியர் ஆல்பர்ட் என் நினைவில் இருக்கிறார். படிக்க

இது உண்மைக் கதை (1984). உலக நூல் நாள் சிறப்புப் பதிவு

சூழல்: 1984இல் ஒரு வாரக்கடைசி. மொபைல் போன்கள் கிடையாது. நண்பர்கள் வீட்டுக்குச் சொல்லிவிட்டுச் செல்வது என்பது பழக்கத்தில் வராத காலம். படிக்க

ஜாதி என்பது ஒரு திருமண முறை

“ஜாதி என்பது திருமண முறை” என்கிற தெளிவை அடிச்சிக்க முடியாது. “இப்பல்லாம் யாருங்க ஜாதி பாக்கறாங்க?” என்பவர்களிடம் “உங்கள் துணை உங்களின் ஜாதியா?” என்று கேட்டால் பேச்சு அடங்கும். படிக்க

மண்டேலா: மண்டைல ஒன்னுமில்லாத படம்

மண்டேலா போன்ற படங்களை நான் ஓரிரு நிமிடங்களுக்கு மேல் பார்ப்பதில்லை. அவசியம் இருக்காது. ஆனால், ஆரம்பத்திலேயே கண்டுகொண்டதால், கூத்துப்பட்டறை ந. முத்துசாமிக்காக முழுதும் பார்த்தேன். படிக்க

அமுதம்

நீங்க சாப்பாடு பத்தி பேசறதைக் கேட்டாலே கேலரி எகிறிடும், அமுதா! “எள்ளு எடுத்து மிக்ஸியிலே அரைச்சிக்கிட்டு, அப்புறம் மண்ட வெல்லத்தைப் போட்டு அரைச்சி உருண்டை உருண்டையா பண்ணி வெச்சிக்கிங்க. போக வர சாப்பிடுங்க.” படிக்க

சீனச் சங்க இலக்கியம் கவித்தொகை

மார்ச் 28 பேசியதுதான் முதல்முறை நான் முழுக்க முழுக்கக் கவித்தொகை (Classic of Poetry / Book of Songs / Shijing / 詩經) பற்றி மட்டுமே உரையாற்றியது. உங்களுக்கு விருப்பப்பட்ட பகுதிகளுக்கு சுட்டிகளாய் கொடுக்கிறேன்... படிக்க

நாம் நாமாய் இருப்பது பற்றி, தீபா

கடைசியாகப் பூக்களின் பக்கத்தில் உட்கார்ந்து பார்த்தது எப்போது?” என்று நண்பர்களைக் கேட்டிருந்தேன். தாய்வானிலிருந்து தீபா நிதானமாக வசந்த கால மலர்களைப் போல் தனது கருத்துகளை வி(வ)ரித்திருந்தார். படிக்க

தாய்மொழியைக் கற்கவேண்டியதன் அவசியம் என்ன? - காணொளி

இந்தத் தலைப்பில் சில நிமிடங்கள் பேச முடியுமா என்று கேட்டார் வலைத்தமிழ் பார்த்தசாரதி. பெரிதாக முன்னேற்பாடுகள் ஏதுமின்றி மனதில் தோன்றியதைப் பேசினேன். படிக்க

மறக்கமுடியாத மாலையில் மறந்த பை

போன வருடம் டிசம்பர் 18ஆம் தேதி, நான் எனது பாஸ்போர்ட், பணம், விமான சீட்டு அனைத்தும் இருந்த கருப்பு நிற தோள் பையைத் தொலைத்துவிட்டு நெடுஞ்சாலையில் நின்றுகொண்டிருந்தேன். படிக்க

அக்கினிக் குஞ்சுகள்: இரண்டு குறுங்கதைத் தொகுப்புகள்

இந்து தமிழ்திசையில் வெளியான நூல் அறிமுகம். எழுதித்தள்ளிய காவியக் காலங்களிலிருந்து எழுத்தை எண்ணும் கீச்சுக் காலத்துக்கு வந்துவிட்டோம். கதை சிறுத்தாலும் காரம் போகாது என்று நிறுவுகின்றன குறுங்கதைகள். படிக்க

போன்சாய் குறுங்கதைகள்: ‘பின்னணிப் பாடகர்’

ஒரு போன்சாய் மரத்தைப் போல பெருங்கதைகளுக்கான நிதானமும், கால நீட்டமும் முழுமையான உருவமும் கொண்ட குறுங் கதைகளையும் படைக்க முடியும் என்று செய்துகாட்டியிருக்கிறார் சுரேஷ்குமார இந்திரஜித். படிக்க

டேஸ்ட் பொட்டலமாக ஒரு கதைசொல்லியின் கதை

தில்லிகை - தில்லி இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்திருந்த “கதை சொல்லியின் கதை” என்னும் பவா செல்லத்துரையின் சூம் உரை. தன் வாசிப்புகளை கதைசொல்லும் வசியமாக மாற்றியவரின் கதை... படிக்க

கரோனா வைரசுக்குப் பின்வரும் கால உலகம்: ஹராரி

“கரோனா வைரசுக்குப் பின்வரும் கால உலகம்” எனும் யுவல் நோவா ஹராரி எழுதிய முக்கியமான கட்டுரையை அக்கறையுடன் அழகாக மொழிபெயர்த்திருக்கிறார் நண்பர் அண்ணாதுரை. படிக்க

அண்டத்தின் அணையா அறிவுச் சுடர்: ஸ்டீபன் ஹாவ்கிங்

அண்டம் மறுபடியும் குறும்புடன் கண்ணடிக்கிறது. ஜனவரி 8 வானியல்-இயற்பியல் அறிஞர் ஸ்டீபன் ஹாவ்கிங் பிறந்தார். அன்றுதான் கலிலியோவின் பிறந்தநாள். படிக்க

முன்பின் தெரியா ஓவியரின் அன்பும் கனிவும் அக்கறையும்

“அம்மா ஒரு எழுத்தோவியர். Calligraphist. உங்களுக்காகவே ஒரு சிறிய ஓவியத்தை வரைந்திருக்கிறார். அதை உங்களிடம் நேரடியாக கொடுக்குமாறு என்னை கேட்டுக் கொண்டார்."... படிக்க

தெரிந்த பாடல்வரிகளில் மிளிரும் தெரியாத அழகுகள்

திடீரென்று ஏதாவது ஒரு பழைய பாடலின் வரி உங்கள் மனதில் உட்கார்ந்து கொள்ளும். அடம்பிடிக்கும் குழந்தையாய் நம் கவனத்தை இறுக்கக் கட்டிக்கொண்டு விட்டுவிடாமல் கூடவே வரும். படிக்க

தன்முனைப்பு எனும் ஜீவநதி

அராஜகம் என்கிற நல்ல சொல்லுக்கு இப்போது தவறான அர்த்தம் வந்துவிட்டது. தன்னார்வத்துடன் மக்கள் தாங்களே முன்வந்து சமுதாயத்துக்குத் தேவையான காரியங்களைச் செய்வதே ராஜகம் இல்லாத செயல்பாடு. அதுவே அராஜகம். படிக்க

பங்யோ: “நட்பே!” என்னும் சொல் போதும்

நண்பர் இசைக்கலைஞர் ச்சாவ் என்பவருடன் நாங்கள் சந்தித்த நிகழ்ச்சி பல பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது. இதைக் குறித்துத் தமிழில் 'உண்மைச் சிறுகதை' எனும் வடிவத்தில் ஒரு கட்டுரை. படிக்க

இப்படியும் ஒருவரால் ஒரு மொழியைக் கற்றுக் கொடுக்க முடியுமா?

எளிதில் சீன மொழி பேச பயனுள்ள 21 வாக்கியங்கள்: இன்று தான் படிக்கத் துவங்கினேன். முன்னுரையைப் படித்தேன்,படித்தேன்,படித்தேன். ஆமாம், மூன்று முறை படித்தேன். படிக்க