சிந்தனை, செய்தி, சில்லறை...20210328

சீனச் சங்க இலக்கியம் கவித்தொகை - பயணிதரன் - காணொளி

20210227

எனக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. கவித்தொகைக்கும் எனக்கும் இருபது வருடத் தொடர்பு இருந்தாலும் ஒரு வகையில் மார்ச் 28 பேசியதுதான் முதல்முறை நான் முழுக்க முழுக்கக் கவித்தொகை (Classic of Poetry / Book of Songs / Shijing / 詩經) பற்றி மட்டுமே உரையாற்றியது. (முன்பெல்லாம் சீன மொழிபெயர்ப்பு, சீன இலக்கியம் என்று பொதுவாகப் பேசும் வாய்ப்புகளின்போது கவித்தொகை பற்றிப் பேசியிருக்கிறேன்.) இன்னும் ஒருமுறை, அறிதல் கலைவெளி நண்பர்களுக்கு நன்றி.

பயணிக்குறிப்புகள் மின்னஞ்சல் மூலமும் தொடர்பில் இருக்கும் நண்பர்கள் பவானீஸ்வரி, காளிதாஸ் அசோக், நா.பாலசுப்பிரமணியன், தீபா ஸ்ரீதரன், கோபால் கருணாநிதி ஆகியோர் நேரடியாக உரையின் ஜூம் சந்திப்பு வழியாகவும், பிறகு மின்னஞ்சல் மூலமாகவும் உரை பற்றிய தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்கள். சிறப்பு நன்றிகள்!

ஏற்கனவே சில நூறு பேர் பார்த்திருக்கிறார்கள். இயன்றால் உங்கள் செவிக்கும் சிறிது கிடைக்கச் செய்யுங்கள்.

0:00 முதல் 0:08 நிமிடங்கள் - துவக்க உரையும் அறிமுகமும்

0:08 முதல் 1:29 நிமிடங்கள் - எனது உரை, சங்க இலக்கியத்துக்கும் கவித்தொகைக்கும் உள்ள ஒப்புமைகள் பற்றித் துவங்குகிறது

1:29 முதல் 2:32 வரை பிரமாதமான கலந்துரையாடல்