சிந்தனை, செய்தி, சில்லறை...20210417

ஜாதி என்பது ஒரு திருமண முறை - 20210417

20210417

நான் மீண்டும் படித்துப் பார்க்கிறேன். என்ன ஒரு தெளிவான தீர்க்கமான பாய்ச்சல் அம்பேத்கரிடம்!

“ஜாதி என்பது திருமண முறை” என்கிற தெளிவை அடிச்சிக்க முடியாது. “இப்பல்லாம் யாருங்க ஜாதி பாக்கறாங்க?” என்பவர்களிடம் “உங்கள் துணை உங்களின் ஜாதியா?” என்று கேட்டால் பேச்சு அடங்கும்.

“நாங்க ஒஸ்தி என்பவர்களின் சாஸ்திர புத்தகங்களை மதிக்காதே” என்பதில் ஆணி வேரையே உலுக்கும் தீர்க்கம் தெரிகிறது. சாஸ்திரத்தை வெச்சித் தானே தலை, கால் என்று பிறப்பைப் பிரித்தது? அதையே “தூக்கிக் கிடாசு, திருமண முறையை மாற்று” என்கிறார்.

“பயிருக்கு நீர் போலக் கருத்துக்குப் பரப்புரை முக்கியம்”

—அம்பேத்கர்

#கற்பி #ஒன்றுசேர் #புரட்சிசெய்

பிறந்த கும்பலுக்குள்ளேயே கல்யாணம் பண்ணிக்கிற முறை.

ஜாதி முறைங்கற கும்பல் முறையின் அடிப்படை அம்சம் என்ன?

பிறப்பின் அடிப்படையால ஒரு கும்பலுக்குள்ளேயே கல்யாணம் செஞ்சிக்கிற வழக்கம் தான் கும்பல் முறை. அதுக்கப்பறம், உங்க கும்பலைத் தொடமாட்டோம், அது இதுன்னு வந்தாலும், பிறந்த கும்பலுக்குள்ளேயே கல்யாணம் தான் அடிப்படை.

பிறந்த கும்பலுக்குள்ளேயே கல்யாணம் பண்ணிக்கிற முறை எப்படி வளர்ந்தது?

ஒரு கும்பல், நாங்க தனி, ஸ்பெஷல், வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டோம்னு சொன்னதும், ‘ஸ்பெஷல் இல்லாதவர்கள்’ங்கற முத்திரை தானாவே உருவாகிடுது. அவங்களும், ‘நாங்க வேற மாதிரி ஸ்பெஷல்’ன்னு கும்பல் கும்பலாக கூடி அவங்களுக்குள்ளேயே கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. முதல் கும்பல், ‘நாங்க தான் பர்ஸ்ட் ரேங்க்’ என்று சொல்லிக்கிச்சு. மத்த கும்பல்ங்களுக்கும் ரேங்கிங் தந்தது. கும்பல் இல்லாதவர்களுக்கு கடைசி ரேங்கில் புது கும்பல்.

பின்னாலே, ‘நாங்க தான் பர்ஸ்ட் ரேங்க்’ என்று சொல்லிக்கிட்ட கும்பல், சாஸ்திர புஸ்தகங்கள் எழுதிச்சு. அதிலே, கும்பல் முறைக்கு, ‘தொழில் முறை’ ‘அறிவு’ ‘பழக்கவழக்கங்கள்’ விதி’ அப்படீன்னேல்லாம் பூச்சு பூசிச்சு. இதையெல்லாம் ‘கடவுள்’ சொன்னாருன்னு சொல்லிச்சு. ‘பர்ஸ்ட் ரேங்க் இல்லாத கும்பல் எதுவும் சாஸ்திர புஸ்தகங்களை படிக்கக்கூடாது, நாங்க தான் படிச்சு சொல்லுவோம்’ன்னு சொல்லிச்சு. இதனால தான் ‘நாங்க தான் பர்ஸ்ட் ரேங்க்’ன்னு சொல்லிகிட்டே கும்பல் சாஸ்திர புஸ்தங்களை தூக்கி வெச்சுக் கொண்டாடுது.

பிறந்த கும்பலுக்குள்ளேயே கல்யாணம் பண்ணிக்கிற முறையை யார் எதிர்ப்பது?

‘நாங்க தான் பர்ஸ்ட் ரேங்க்’ என்று சொல்லிக்கிட்ட கும்பல் இந்த பிறந்த கும்பலுக்குள்ளேயே கல்யாணம் பண்ணிக்கிற முறையால் ஆயிரக்கணக்கான வருஷமா நிறைய லாபம் பார்த்துக்கிட்டுருக்கு. அந்த கும்பலுக்குள்ளயே கல்யாணம் பண்ணிக்கிட்டு, படிச்சுக்கிட்டு, சொத்து சேத்துக்கிட்டு ‘பாத்தியா, இதனால தான் நாங்க பர்ஸ்ட் ரேங்க், நீங்கல்லாம் பின்னால’ன்னு சொல்லிக்கிட்டு இருக்கு. மத்த கும்பல்கள் மாறிடாம இருக்க என்னெவெல்லாம் பண்ண முடியுமோ, அத்தனையும் பண்ணிக்கிட்டு இருக்கு. ரெண்டாவது ரேங்க், மூணாவது ரேங்க்ன்னு கொடுக்கப்பட்ட கும்பல் எல்லாம், ‘கடைசி ரேங்குன்னு சொல்லாம விட்டாங்களே, ரெண்டாவது ரேங்குன்னாலும் ஸ்பெஷல் தான்’-ன்னு இருக்கு. இந்த நடுவில போடப்பட்ட கும்பல் எல்லாம், ‘வேற கும்பல்ல கல்யாணம் பண்ணினா, உன்னோட மூணாவது ரேங்க்கும் காலி. நீயும் ஃபெயில்’ன்னு ‘நாங்க தான் பர்ஸ்ட் ரேங்க்’ என்று சொல்லிக்கிட்ட கும்பல் மிரட்டறதால, கெடச்சவரைக்கும் லாபம்ன்னு இருக்கு. கீழ போடப்பட்ட கும்பல்ங்களோட கல்யாணம் பண்ணிக்கிறது இல்ல.

அதனால, ‘நீங்கள்லாம் கடேசி ரேங்க், இல்ல ஃபெயிலு’ன்னு தள்ளப்பட்டதால அவமானப்பட்டு முழுக்க முழுக்க நஷ்டம் அடையும் கும்பல்கள் தான் எதிர்ப்பை ஆரம்பிக்கணும்.

பிறந்த கும்பலுக்குள்ளேயே கல்யாணம் பண்ணிக்கிற முறையை எப்படி எதிர்ப்பது?

இரண்டு வழி: முதல்ல, ‘நாங்க தான் பர்ஸ்ட் ரேங்க்’ என்று சொல்லிக்கிட்ட கும்பல் எழுதி வெச்ச சாஸ்திர புஸ்தங்களை மதிக்காதே. சாஸ்திர புஸ்தகத்துக்கு மதிப்பு இல்லாமப் போனா, ‘நாங்க தான் பர்ஸ்ட் ரேங்க்’ என்று சொல்லிக்கிட்ட கும்பலுக்கு ஸ்பெஷல் மதிப்பு கிடையாது. கும்பல் முறைக்கு ‘தொழில் முறை’ ‘அறிவு’ ‘பழக்கவழக்கங்கள்’ விதி’ ‘கடவுள்’ன்னு பூச்சு எதுவும் இல்லாமல் போகும். எந்த கும்பலுக்கும் பிறப்பால ஸ்பெஷல் மதிப்பு இல்லைன்னு ஆயிட்டா, கும்பல் முறை தாக்குப் பிடிக்காது. சாஸ்திர புஸ்தகங்கள் இருக்கிற வரைக்கும் பிறந்த கும்பலுக்குள்ளேயே கல்யாணம் பண்ணிக்கிற முறை இருக்கும். சாஸ்திர புஸ்தங்களை விடாம பிறந்த கும்பலுக்குள்ளேயே கல்யாணம் பண்ணிக்கிற முறையை ஒழிக்க முடியாது.

ரெண்டாவதாக, கும்பல் விட்டு கும்பல் கல்யாணம் செய்துகொள். உன் பிள்ளைகளுக்கும் கும்பல் விட்டு கும்பலில் கல்யாணம் நடக்கட்டும். பிறந்த கும்பலுக்குள்ளேயே கல்யாணம் பண்ணிக்கிற முறையில் குழப்பம் வந்தால்தான் கும்பல்கள் ஒழியும்.

கும்பல் முறையால் இது வரைக்கும் நஷ்டம் அடைந்த கும்பல்களுக்கு எப்படி உதவுவது?

‘பர்ஸ்ட் ரேங்க் என்று சொல்லிக்கொண்ட பிறந்த கும்பலுக்குள்ளேயே கல்யாணம் பண்ணிக்கிற கும்பல்’ ஆயிரக்கணக்கான வருஷமா நிறைய லாபம் பாத்தாச்சு. கீழ் ரேங்கில தள்ளிவிட்டவங்கள குறி வெச்சி நஷ்டமடைய வெச்சாச்சு. ‘இனிமே லாபம் நஷ்டமெல்லாம் பாக்காம ஒண்ணா இருக்கலாமே’ன்னு சொல்லும். இது போங்கு. இதுவரைக்கும் நஷ்டப்பட்ட கும்பலுக்கு நஷ்ட ஈடு தந்து மேலே வர உதவணும்.

இந்தியாவில் ஜாதிகள் - அம்பேத்கர் Castes in India - Ambedkar நூலிலிருந்து.




“மனிதர்கள் இறந்துபோவார்கள். சிந்தனைகளும் அப்படித்தான்.

செடிக்குத் தண்ணீர் மாதிரி, சிந்தனைக்கு பரப்புதல் வேண்டும்.

இல்லாவிட்டால்,

இரண்டுமே வாடி மடிந்துவிடும்”

- அம்பேத்கர்

"Men are mortal. So are ideas. An idea needs propagation as much as a plant needs watering. Otherwise both will wither and die" - B. R. Ambedkar

முன்னேற்றச் சிந்தனைகளைப் பரப்புவோம்.