சிந்தனை, செய்தி, சில்லறை...20210423

இது உண்மைக் கதை (1984). உலக நூல் நாள் சிறப்புப் பதிவு - 20210423

(சந்தர், தரன், ஷண்முகம் - 2019)


20210423

இது உண்மைக் கதை. உலக நூல் நாள் சிறப்புப் பதிவு. 📔📕📗📘📙📚📖

சூழல்: 1984இல் ஒரு வாரக்கடைசி. மொபைல் போன்கள் கிடையாது. நண்பர்கள் வீட்டுக்குச் சொல்லிவிட்டுச் செல்வது என்பது பழக்கத்தில் வராத காலம்.

காட்சி 1. தரன் வீடு: தரனின் புது கல்லூரித் தோழன் Chandar சந்தர் வருகிறான். இருவரும் காலை உணவு சாப்பிட்டுவிட்டு, சென்னை கிருத்துவக் கல்லூரி நூலகத்துக்குக் கிளம்புகிறார்கள்.

காட்சி 2. பாதி வழியில், தனது பள்ளித் தோழியான Vaidehi வைதேகியை சந்தருக்கு அறிமுகப்படுத்த விரும்பியதால், தரனும் சந்தரும் வழியில் இருக்கும் வைதேகி வீட்டை நோக்கித் திரும்புகிறார்கள்.

காட்சி 3. சந்தரின் வீடு: சந்தரின் பள்ளித் தோழன் பாலு சந்தரின் வீட்டுக்குப் போகிறான். சந்தரின் அம்மா விளக்குகிறார்: சந்தர் அவனது புது கல்லூரித் தோழன் தரன் வீட்டுக்குப் போயிருக்கிறான்.

காட்சி 4. தரன் வீடு: தரனின் பள்ளி - கல்லூரித் தோழன் ஷண்முகம் Shun Mugam தரன் வீட்டுக்கு வருகிறான். தரனின் அம்மா விளக்குகிறார்: தரன் அவனது புது கல்லூரித் தோழன் சந்தருடன் சென்னை கிருத்துவக் கல்லூரி நூலகத்துக்குப் போயிருக்கிறான்.

காட்சி 5. ஷண்முகம், சென்னை கிருத்துவக் கல்லூரி நூலகத்துக்குப் போகிறான்.

காட்சி 6. தரன் வீடு: பாலு தரன் வீட்டுக்கு வருகிறான். தரனின் அம்மா விளக்குகிறார்: தரன் அவனது புது கல்லூரித் தோழன் சந்தருடன் சென்னை கிருத்துவக் கல்லூரி நூலகத்துக்குப் போயிருக்கிறான். பாலு தனக்குச் சந்தரைத் தெரியும் என்கிறான். தரனின் அம்மா, ஷண்முகம் என்ற தரனின் பள்ளித் தோழனும் வந்ததையும், அவனும் சென்னை கிருத்துவக் கல்லூரி நூலகத்துக்குப் போயிருக்கிறான் என்பதையும் சொல்கிறார். பாலு, தனக்கு ஷண்முகத்தைத் தெரியாது, ஆனால் பிரச்சனை இல்லை என்கிறான்.

காட்சி 7. பாலு, சென்னை கிருத்துவக் கல்லூரி நூலகத்துக்குப் போகிறான்.

(பாலு, தரன் - 2021)

காட்சி 8. நூலகம்: தரனும் சந்தரும் நூலகத்துக்கு வருகிறார்கள். இதுவரை ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகாத ஷண்முகமும் பாலுவும் தோள் மேல் கை போட்டுக்கொண்டு எதிரே வருவதைப் பார்க்கிறார்கள். “டேய்! எப்டிடா?”

காட்சி 9. பிளாஷ்பேக் காட்சித் துண்டுகள்:

ஷண்முகம் நூலகத்தில் நுழைந்து, “தமிழ் இலக்கியப் பகுதி எங்கே இருக்கிறது?” என்று கேட்கிறான். படியேறி மேலே போகிறான்.

பாலு நூலகத்தில் நுழைந்து, “தமிழ் இலக்கியப் பகுதி எங்கே இருக்கிறது?” என்று கேட்கிறான். படியேறி மேலே போகிறான். அங்கே ஒரு இளைஞன் யாரையோ தேடுவது போலத் தெரிய, அவனை அணுகிக் கேட்கிறான்: “நீ ஷண்முகமா? தரனின் நண்பனா?”

உனது நண்பர்களின் நூல்களை அறிந்துகொண்டால், உனது நண்பர்களை அறிந்துகொள்ளலாம்.

உலக நூல் நாள் வாழ்த்துகள்! 📔📕📗📘📙📚📖