சிந்தனை, செய்தி, சில்லறை...20210514
சிந்தனை, செய்தி, சில்லறை...20210514
கர்நாடகத்தில் 12ஆம் நூற்றாண்டில் மதச் சீர்த்திருத்தத்துக்குப் பங்களித்த பசவண்ணாவின் பிறந்தநாள் இன்று.
பணம்படைத்தோர் சிவனுக்குக் கோயில்கள் செய்வார்
பணமில்லா ஏழை நான் என்செய்ய முடியும்?
என் கால்கள் பெருந்தூண்கள்
என் உடலே கர்ப்பகிரகம்
என் தலையே பொற்சிகரம்
பெருநதிகள் சங்கமிக்கும் பேரருளே, கேளேன்:
இங்கு நிற்பதெல்லாம் விழும். ஆனால்,
நகர்வதென்றும் நிலைக்கும்.
—பசவண்ணா
ஆங்கிலம் வழி மொழியாக்கம்: பயணி தரன்