அனுபவம், உதவி, பரிமாற்றம்...20210605

உலகை அழிக்கும் வைரஸ்களா நாம்?

YouTube காணொளியில் நூல் அறிமுகம்:

பொருளாதாரம் பற்றி என் மகளுக்கு அளித்த விளக்கம்: முதலாளியத்தின் சுருக்கமான வரலாறு - யானிஸ் வருஃபாகிஸ்

+ 1 பக்க pdf குறிப்புகள்.

இதை ஒரே கிளிக்கில் உங்கள் Facebookஇல் பகிருங்கள்:

YouTube Channelஇல் என்னோட முதல் வீடியோ ஒரு கதையாக இருப்பது குறித்து மகிழ்ச்சி. 😊 அதுவும், ஒரு அப்பா மகளுக்குச் சொல்லும்—நம் எல்லோரையும் பற்றிய—கதை. ஆகவே, கூடுதல் மகிழ்ச்சி. 😊😊இளைஞர்களுக்காக எழுதப்பட்டு உலகின் பழமொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு, தமிழிலும் வந்திருக்கும் இந்த நூலை அறிமுகம் செய்வது குறித்து மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. 😊😊😊

🌱 “எல்லாருக்கும்—முக்கியமா இளைய தலைமுறைக்கு—பொருளாதாரம் பற்றித் தெரிஞ்சிருக்கணும். ஏன்னா, பொருளாதாரம் புரியலைன்னா அரசியல் புரியாது. இளைஞர்களுக்கு அரசியல் புரியலைன்னா நிஜமான ஜனநாயகம் வரமுடியாது. ஆனா, பொருளாதாரத்தை இளைஞர்களுக்கும் புரியறமாதிரி சொல்லணும். அதுக்கு தான் இந்த நூலை எழுதினேன்”ன்னு ஆசிரியர் யானிஸ் வருஃபாகிஸ் சொல்றார்.

வாங்க, சேர்ந்தே பயணிப்போம்!

நண்பர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புகிறேன். ஒவ்வொரு வாரக்கடைசியிலும் வரும் இந்தக் கடிதத்தில் என்னிடமிருந்து 3 விஷயங்கள், பிறரிடமிருந்து 2 மேற்கோள்கள், நீங்கள் சிந்திக்க 1 கேள்வி இருக்கும். புது பதிவுகள், செய்திகள் தவறாமல் உங்களுக்கு வரும். கூடவே, ‘எளிதில் சீன மொழி பேச பயனுள்ள 21 வாக்கியங்கள்’ என்னும் 75 பக்க நூல் இலவசம். உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்யுங்கள்:

🎞️ (‘The Matrix’ படத்தின் வசனத்தை வெச்சே இந்த நூலின் கடைசி பகுதியை எழுதியிருக்கார். வீடியோவிலே விளக்கியிருக்கேன். கேளுங்க. புரியற மாதிரி சொல்றதுன்னா என்னன்னு புரியும்.)

👴 யானிஸ் கிரீஸ் நாட்டின் நிதி அமைச்சரா இருந்தவர். 20க்கும் மேட்பட்ட நூல்கள் எழுதியவர். பொருளாதாரப் பேராசிரியர். இவர் தன்னோட மகளுக்குப் பொருளாதாரம் பற்றி கதையாகச் சொல்லணும்னா என்ன சொல்லுவார்? அந்தக் கதை தான் “பொருளாதாரம் பற்றி என் மகளுக்கு அளித்த விளக்கம்: முதலாளியத்தின் சுருக்கமான வரலாறு” 📕

😳 இதிலே பல சிக்கலான கேள்விகளுக்கான விடைகள் புரியற மாதிரி எளிமையா இருக்கு. உதாரணமா,

1. இங்கிலாந்துக்காரர்கள் அதிபுத்திசாலிகளாக இருந்ததால் தானா அங்கே தொழிற்புரட்சி வந்தது?

2. தொழிலாளிகளுக்குச் சம்பளம் குறைஞ்சிக்கிட்டே போனால், முதலாளிகளுக்கு லாபம் குறையும். எப்படி? (‘மான்வேட்டை’ கதை தெரியுமா?)

3. மனுஷங்க லாபத்துக்காக உலகத்தை அழிக்கிற (வைரஸ் மாதிரியான) தோற்று நோயா? அப்படி ஆகாம இருக்கணும்னா நாம என்ன பண்ணனும்?

🙏 இதை மொழியாக்கம் செய்த திரு எஸ்.வி. ராஜதுரைக்கு நன்றி. பதிப்பித்த க்ரியா ராமகிருஷ்ணனுக்கு புகழ் அஞ்சலிகள். (ராஜதுரை-ராமகிருஷ்ணன் சந்திப்பு, இந்த நூல் மொழியாக்கம் பற்றிய உரையாடலை எல்லாம் ராஜதுரையே அவரது முன்னுரையில் எழுதியிருக்கிறார்.)

இந்த நூலை திரு துளசிதாசன் (திரு பாலகிருஷ்ணன் வழியாக அறிமுகமானார்) அனுப்பிவைத்தார். அன்புக்கு நன்றி.

கடைசியாக:

📚 கூடவே, இந்த நூலைப் பற்றிய என் புரிதல்களை எழுதி, சுருக்கி, ஒரு pdf கோப்பாகச் செய்திருக்கிறேன்.

🔗 என்னோட YouTube சானல்ல, நூல் அறிமுகம் ஒரு தொடர். இன்னும் சில தொடர்கள் வரும். அடுத்ததா, சினிமா பற்றிய ஒரு வீடியோ தயாராகிக்கிட்டு இருக்கு. அம்பேத்கரும் ஜாதியும் பற்றி இன்னொன்னு. மறக்காம SUBSCRIBE பண்ணுங்க.

🗣️ எதிர்காலத்தின் நம்பிக்கையான இளைஞர்களுக்கு இந்த வீடியோவை அறிமுகம் பண்ணுங்க.

❤️💛💙

“பொருளாதாரம் பற்றி என் மகளுக்கு அளித்த விளக்கம்: முதலாளியத்தின் சுருக்கமான வரலாறு” - யானிஸ் வருஃபாகிஸ்

பயணியின் நூல் அறிமுகம்.

YoutTube Link / வீடியோ சுட்டி முதல் கமெண்டில்.

🙏 நன்றி.

பயணி தரன்

20210605

இந்த நூல் + இனிவரும் நூல்களின் 1 பக்க PDF பயணியின் குறிப்புகள்: சுட்டி

இதை ஒரே கிளிக்கில் உங்கள் Facebookஇல் பகிருங்கள்: