அனுபவம், உதவி, பரிமாற்றம்...20210611

அப்பாவும் மகனும் - ஒரு உரையாடல்

“அப்பா, ஞாபகம் இருக்கா? நான் மொதமொதல்ல pop filter இல்லாம டீ வடிகட்டியையும் என்னோட ஜட்டித் துணியையும் வெச்சி ரெக்கார்ட் பண்ணினேனே!”

இதை ஒரே கிளிக்கில் உங்கள் Facebookஇல் பகிருங்கள்:

#உரையாடல்கள் / #conversations

புதிதாகத் துவங்கிய எனது யூட்யூப் சேனலுக்கு ஒளி/ஒலி கருவிகளை எப்படி பயன்படுத்தறது ன்னு எங்கள் மகன் அபியைக் கேட்டேன் (Abhi the Nomad). பொறுமையாக சொல்லித் தந்தார். எங்கள் உரையாடலில் கவனத்துக்குரிய சில தருணங்கள்:

***

ஒன்று:

“அப்பா, ஞாபகம் இருக்கா? நான் மொதமொதல்ல pop filter இல்லாம டீ வடிகட்டியையும் என்னோட ஜட்டித் துணியையும் வெச்சி ரெக்கார்ட் பண்ணினேனே!”

“நல்லா ஞாபகம் இருக்கு. அதை வெச்சே நீயும் கீர்த்தியும் வயசு வித்தியாசம் இல்லாமல் எல்லாரும் கலந்துக்கிற “Song for Better Fiji” தேசிய அளவிலான இசைப் போட்டியில ஆயிரம் டாலர் முதல் பரிசு வாங்கினீங்க!”

ரெண்டு பேரும் புன்னகைக்கிறோம்.

வாங்க, சேர்ந்தே பயணிப்போம்!

நண்பர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புகிறேன். ஒவ்வொரு வாரக்கடைசியிலும் வரும் இந்தக் கடிதத்தில் என்னிடமிருந்து 3 விஷயங்கள், பிறரிடமிருந்து 2 மேற்கோள்கள், நீங்கள் சிந்திக்க 1 கேள்வி இருக்கும். புது பதிவுகள், செய்திகள் தவறாமல் உங்களுக்கு வரும். கூடவே, ‘எளிதில் சீன மொழி பேச பயனுள்ள 21 வாக்கியங்கள்’ என்னும் 75 பக்க நூல் இலவசம். உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்யுங்கள்:

(முன்கதைச் சுருக்கம்: நாங்கள் ஃபிஜித் தீவுகளில் வாழ்ந்த காலம். பிள்ளைங்க பள்ளி மாணவர்கள். அபியின் இசைப் பயணத்தின் துவக்க காலம். அவருக்கு ஒரு தரமான USB மைக் வாங்கிக்கொடுத்தோம். உடனே, ஒரு pop filter வேண்டும் என்றார். மைக்கின் முன்னால் வட்ட வடிவில் இருக்கும் அந்தக் கருவி, நாம் பேசும்போது வரும் காற்றை வடிகட்டிவிட்டு ஒலியை மட்டும் மைக்குக்கு அனுப்பும். “ரொம்ப விலை இல்லேப்பா,” என்றார்.

வைதேகியும் (Vaidehi) நானும், ‘நம்மால வாங்க முடியும்ங்கறது மட்டுமே காரணமா இருக்கக் கூடாது, இருக்கற விஷயங்களை வெச்சி வேலை செய்’ ன்னு சொன்னோம்.

அதே நேரத்தில, ஃபிஜித் தீவுகளில ஒரு இசைப் போட்டி அறிவிச்சாங்க. எல்லா வயசுக்காரங்களும், தொழில்முறை இசைக் கலைஞர்கள் உட்பட, கலந்துக்கலாம். முதல் பரிசு 1,000 ஃபிஜி டாலர் (தோராயமாக 35,000 ரூபாய்). அவங்களே பாட்டு எழுதி, இசை அமைச்சு, பாடி, பதிவு பண்ணி, mp3 வடிவத்துல அனுப்பி வைக்கணும்.

அபியம் கீர்த்தியும் (Keerthi) ஒரு பாட்டு எழுதினாங்க. ரெண்டு பெரும் பாடினாங்க. அபி ஒரு பழைய டீ வடிகட்டியை எடுத்து ஒரு ஜட்டித் துணியை அதுல மாட்டி, பின் குத்தி அதையே pop filter ஆக பயன்படுத்தி அந்தப் பாட்டை பதிவு செய்தார்.

அபியும் கீர்த்தியும் அந்தப் போட்டியில் முதல் பரிசாக 1000 ஃபிஜி டாலரை வென்றார்கள்.)

***

இரண்டு:

“அப்பா, நீங்க எடிட்டிங் பண்ற வேலையை வெளியே கொடுத்திடுங்க. அது ரொம்ப நேரத்தை இழுக்கும். அவ்வளவு ஒன்னும் செலவு ஆகாது.”

“இல்ல அபிண்ணா. நீ உன் இசையால நல்லா சம்பாதிக்கிறே. நீ அதைச் செய்யலாம். நானே எடிட் பண்றேன், இப்போதைக்காவது. எனக்கு அந்த புது வேலையைக் கத்துக்கறது புடிச்சிருக்கு. அது மட்டுமில்லாம, நம்மால வாங்க முடியும்ங்கறது மட்டுமே காரணமா இருக்கக் கூடாது, இருக்கற விஷயங்களை வெச்சி வேலை செய்வோம்.”

“அதானே!”

ரெண்டு பேரும் சிரிக்கிறோம்.

***

பயணி தரன் யூட்யூப் சேனல் சுட்டி: https://www.youtube.com/channel/UCoes_JX07Eux23lWo2LZ9xQ

அபி எனும் நாடோடி (Abhi the Nomad) யூட்யூப் சேனல் சுட்டி: https://www.youtube.com/channel/UCcoaUT2nZfViQo-7RRB34tQ

***

ஒளிப்படம்: வைதேகி.

#learning #music #Recording #share

இதை ஒரே கிளிக்கில் உங்கள் Facebookஇல் பகிருங்கள்: